weather

img

ஜூலை மாதத்தில் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மழை பொழிவு இயல்பை விட அதிகமாக நீண்ட கால சராசரி மழைப்பொழிவான 28.04 செ.மீ -ஐ விட 106 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்ஜெய் மொஹபத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
     கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு மற்றும் தென்கிழக்கு தீபகற்க பகுதிகளை தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யக்கூடும் எனவும் தென்கிழக்கு தீபகற்க இந்தியாவின் ஒருசில பகுதிகளை தவிற நாட்டின் பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையை விட சற்று அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

;